இலட்சிய அண்ணா இலட்சம் அண்ணா

தமிழ்க்கொடி என்ற தலைப்பிலான ஒரு நூல்தொகுப்போடு 2007 இல் தொடங்கியது ஆழியின் பயணம். இன்று தமிழின் மிக முக்கியப் பதிப்பகங்களில் ஒன்றாக உயர்ந்திருக்கிறது.

தமிழ் உலகத்தின் மிகச்சிறந்த எழுத்தாளர்களுடனும் சிந்தனையாளர்களுடனும் ஆழி பயணிக்கிறது. எமது சிறந்த நூலாசிரியர்களில் சிலர்: இரா. செழியன், கவிஞர் ஞானக்கூத்தன், கோணங்கி, ரவிக்குமார், அழகிய பெரியவன், பா. வெங்கடேசன், அய்யப்ப மாதவன், பாமா, பா. செயப்பிரகாசம், சா. தேவதாஸ், குட்டி ரேவதி, ஸ்ரீநேசன், கல்யாண்ஜி, சமயவேல், ஹெச். ஜி. ரசூல், ஸ்டாலின் ராஜாங்கம், சந்திரன்,  யோ. திருவள்ளுவர், ஆழி செந்தில்நாதன், பேயோன், தமிழ் நதி, கெளதம சன்னா, டாக்டர் அ. ராமசாமி, க சுபாஷிணி.

ஆழியின் நூல்கள் பெரும்பாலும் அரசியல், வரலாறு, வாழ்க்கை வரலாறு, பொருளாதாரம், சுற்றுச்சூழல், அறிவியல், உலக விவகாரங்கள், இலக்கியம், இலக்கிய விமர்சனம், பண்பாட்டு ஆய்வுகள், சமூக ஆய்வுகள், ஊடகவியல் ஆய்வுகள், சினிமா விமர்சனம் உள்ளிட்ட களங்களில் விரிகிறது. அண்மையில் மின்னூல்கள், இணைய வழி விநியோகம் ஆகிய களங்களினூடாக ஆழி தன் பரப்பை விரிவுசெய்கிறது.

அண்மைக்காலமாக, உலகளாவிய புத்தக நிறுவனங்களோடு இணைந்து ஆழி புதிய மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிடுகிறது.

உலகப் பொதுமறை என்றழைக்கப்படும் திருக்குறளிலிருந்து நூறு திருக்குறள்களைத் தேர்ந்தெடுத்து, ஒரு குறள் ஒரு மொழி என நூறு மொழிகளில், குறள் 100 மொழி 100 என்கிறத் தலைப்பில் ஆழி பதிப்பகம் ஒரு சிறிய நூலை 2019 இல் வெளியிட்டிருந்தது. அந்த நூல் தொடக்கத்திலிருந்தே பரவலான வரவேற்பைப் பெற்றுவந்த நிலையில் 2023 இல் அதற்கு மாபெரும் புகழ்வெளிச்சம் கிடைத்தது.

ஜனவரி 2023 இல் சென்னையில் நடந்த சென்னை பன்னாட்டுப் புத்தக் கண்காட்சியில் அனைவரையும் கவனத்தையும் ஈர்த்தது ஆழி பப்ளிஷர்ஸ் வெளியிட்ட குறள் 100 மொழி 100 புத்தகம்தான். கையடக்கப் பதிப்பாக ஆழி வெளியிட்ட இந்த நூலை கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் மிகப்பெரிய புத்தகமாக வடிவமைத்து அரங்கின் மையத்தில் வைத்திருந்தனர். தமிழ்நாடு முதல் அமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யமொழி உள்ளிட்ட தலைவர்களும் வெளிநாட்டுப் பார்வையாளர்களும் இதை ஆச்சரியத்தோடு பார்த்தனர்.

வெளிநாட்டு, இந்திய பார்வையாளர்கள் இந்த பெரிய அளவு நூலைப் புரட்டி, தங்கள் மொழியில் திருக்குறள் இருக்கிறதா என்பதைத் தேடிபார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். கண்காட்சி அரங்கில் மேலே தொடங்கவிடப்பட்டிருந்த புத்தக வடிவங்களிலும் இந்தத் திருக்குறளே இடம்பெற்றிருந்தது.

கண்காட்சிக்குப் பிறகு இந்த பெரிய குறள் நூல், சென்னையிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கே மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. தினம்தோறும் அந்த நூலகத்துக்கு வருபவர்கள், முகப்பிலேயே வைக்கப்பட்டுள்ள நூறு மொழி திருக்குறள் புத்தகத்தைப் புரட்டாமல் போவதில்லை

Discover more from Aazhi Books

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading