உலகப் பொதுமறை என்றழைக்கப்படும் திருக்குறளிலிருந்து நூறு திருக்குறள்களைத் தேர்ந்தெடுத்து, ஒரு குறள் ஒரு மொழி என நூறு மொழிகளில், குறள் 100 மொழி 100 என்கிறத் தலைப்பில் ஆழி பதிப்பகம் ஒரு சிறிய நூலை 2019 இல் வெளியிட்டிருந்தது. அந்த நூல் தொடக்கத்திலிருந்தே பரவலான வரவேற்பைப் பெற்றுவந்த நிலையில் 2023 இல் அதற்கு மாபெரும் புகழ்வெளிச்சம் கிடைத்தது. ஜனவரி 2023 இல் சென்னையில் நடந்த சென்னை பன்னாட்டுப் புத்தக் கண்காட்சியில்
செவ்வியல் காலத்திலிருந்து அண்மைக் காலம் வரை தமிழில் வெளிவந்திருக்கும் மிக முக்கியமான நூல்களின் வரிசை இது. காலத்தை வென்ற கிளாசிக்குகளை வாசகர்களிடம் எடுத்துச்செல்வதற்கான முயற்சி. இந்த நூல்வரிசையில் இப்போது திராவிட இயக்கம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் முற்போக்கான இயக்கங்களின் தலைவர்களும் அறிஞர்களும் எழுதிய நூல்கள் முதலில் இடம்பெறுகின்றன. தொடக்கத்தில் நாட்டுடமையாக்கப்பட்ட நூல்களிலிருந்து அதிகம் இடம்பெற்றாலும் விரைவில் மற்ற நூல்களும் இடம்பெறும்.
தமிழ்க்கொடி என்ற தலைப்பிலான ஒரு நூல்தொகுப்போடு 2007 இல் தொடங்கியது ஆழியின் பயணம். இன்று தமிழின் மிக முக்கியப் பதிப்பகங்களில் ஒன்றாக உயர்ந்திருக்கிறது. தமிழ் உலகத்தின் மிகச்சிறந்த எழுத்தாளர்களுடனும் சிந்தனையாளர்களுடனும் ஆழி பயணிக்கிறது. எமது சிறந்த நூலாசிரியர்களில் சிலர்: இரா. செழியன், கவிஞர் ஞானக்கூத்தன், கோணங்கி, ரவிக்குமார், அழகிய பெரியவன், பா. வெங்கடேசன், அய்யப்ப மாதவன், பாமா, பா. செயப்பிரகாசம், சா. தேவதாஸ், குட்டி ரேவதி, ஸ்ரீநேசன், கல்யாண்ஜி, சமயவேல்,