Description
தமிழர் திருமண முறை’, ‘சங்ககாலத் தமிழர் நாகரிகம்’, ‘தமிழர் வாழ்வில் காதல்’, ‘அகப்பொருள் விளக்கம்’, ‘தொகை நூல்களில் – காதல் காட்சிகள்’, ‘திருமணம் நிகழ்த்தும் முறை, ‘வாழ்க்கைக் கலை’, என்பன போன்ற தலைப்புகளில் வெளிவந்துள்ள ஏடுகள் பல. அவை ‘திருமணம் தொடர்பான கருத்துகளைத் தலைப்புக்கு ஏற்ற பெற்றியில் விவரிப்பன. சமுதாய வாழ்வில் திருமணத்திற்குள்ள தலையாய இடத்தை மட்டுமேயல்லாமல், தமிழர்களின் மனத்தில் பதிந்துள்ள பல எண்ணங்கள் காலப்போக்கில் நம்பிக்கையாக வளர்ந்து, உரம்பெற்று அவர்களது அறிவைச் சிறைபடுத்தி, அவர்தம் வாழ்வை, உரிமை உணர்வு தலையெடுக்காத நிலையில் அழுத்தி வைத்திருப்பதற்கான பல காரணங்களையும் ஒல்லும் வகையால் விளக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.
பழங்காலந்தொட்டு இக்காலம் வரையில், பல்வேறு அறிஞர் பெருமக்கள், புலவர்கள், கவிஞர்கள் ஆகியோரின் கருத்துகளையெல்லாம் திரட்டி தமிழர்களின் இல்லத்திருமணங்களில் எந்த முறை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பது மாத்திரமன்றி, தமிழர்களின் வாழ்க்கைமுறை, தன்மானம் போற்றும்முறை, ஆரிய ஆதிக்கத்திற்கு அடிபணியாது வீறுகொண்டு நின்றிட ஏற்றிட வேண்டிய மூடநம்பிக்கை யொழிந்த பகுத்தறிவு முறை, ஆண்பெண் சமத்துவத்தை நிலைநாட்டும் முற்போக்குக் கொள்கை முறை என இப்படி அவர் தமிழ்ச் சமுதாயத்துக்குச் சொல்லவேண்டுமென்று விரும்பிய அனைத்தையும் இந்நூலில் அழகுபடச் சொல்லியிருக்கிறார். மணவிழா முடிந்து ஆரம்பமாகும் இல்வாழ்க்கை எப்படித் திகழ்ந்திடல் வேண்டும் என்பதற்கு வழிமுறைகள் பலவற்றையும் இந்நூலில் விவரித்துள்ளார்.

Reviews
There are no reviews yet.