Description
பாவேந்தர் பாரதிதாசனின் ‘அழகின் சிரிப்பு’ இயற்கையின் எழிலை விவரிக்கும் ஒரு பிரம்மாண்டமான கவிதைத் தொகுப்பு. கடல், தென்றல், காடு, குன்றம், ஆறு, செந்தாமரை, ஞாயிறு, வானம், நிலவு, இருள், சிற்றூர், பட்டணம் போன்ற 16 தலைப்புகளில் இயற்கையின் அழகை எளிமையான மற்றும் செறிவான தமிழில் பாவேந்தர் இதில் பாடியுள்ளார். கதிரவனின் உதயம், கடலின் அலைகள், காற்றின் மெல்லசைவு, அடர்ந்த காடு, குன்றின் கம்பீரம், பறவைகளின் இசை என இயற்கையின் ஒவ்வொரு கூறிலும் அழகை ரசித்துப் பாடியுள்ளார். எல்லோருக்கும் விளங்கக்கூடிய மிக எளிய, அழகான தமிழ் நடையில் எழுதப்பட்டுள்ளது இந்நூலில் சிறப்பு ஆகும். பாரதிதாசன் இயற்கையை வெறும் வர்ணனையாக மட்டுமன்றி, மனித உள்ளங்களை மகிழ்விக்கும் ஒரு பெரும் கலைப்படைப்பாகவே இந்த நூலில் படைத்துக் காட்டியுள்ளார்.

Reviews
There are no reviews yet.