Description
1947-ம் ஆண்டு, ஜுலை மாதம் ஒன்றாம் நாளை திராவிடர் கழகத் தலைவர் பெரியார் ஈ.வெ.ரா அவர்களின் கட்டளைப்படி, திராவிட நாட்டுப் பிரிவினை நாளாகத் தமிழகம் முழுவதும் கொண்டாடினர்.
அன்று, தமிழகத்திலுள்ள ஓவ்வொரு உண்மைத் திராவிடன் உள்ளத்திலும் உணர்ச்சி வெள்ளப் பெருக்கெடுத்தோடும் காட்சியை ஊர்வலங்களில் கண்டோம்! பொதுக் கூட்டமெனும் கடலிலே அவைகள் சங்கமமாகியபோது பொங்கி வீரிட்டெழுந்த போர் முழக்கங் கேட்டோம்!! இந்திய உபகண்டத்தின் வரலாற்று, ஏட்டிலே பொன்னெழுத்துக்களால் பொரிக்கத்தக்க புரட்சிக்கு ஆரம்ப நாளாகிய அன்றுதான் நாம் ‘வீரச் சபதம்’ பூரிந்தோம் !!! இதோ! அச்சபதம் நமது இருதயங்களில் ஓயாது ஒலித்தலையும் உணர்கின்றோம்.
“திராவிட நாடு தனிச் சுதந்தர நாடாக ஆகும்வரை நாங்கள் கிளர்ச்சி செய்தே தீருவோம்”
ஆம், கிளர்ச்சி! புரட்சி!! போர்!!! ஆரிய ஆதிக்கம் அழியுமளவுக்கு அடங்காப் போர் புரியத் திராவிட வீராங்கனைகளுக்கே ஒப்புவிக்கையாகிறது இந்நூல்.
– விவேகி.

Reviews
There are no reviews yet.