Description
அந்த அழகான புல்வெளி நிலப்பரப்பில், காலம் காலமாக கூடாரங்களில் வாழ்ந்துவரும் கூட்டம் அது. அங்கே அழகான இரண்டு சிறுமிகள். அந்த ஸ்தெப்பி புல்வெளிக் கிராமங்களின் அசலான அழகையும் பலரகமான, பலவண்ணமான குதிரைகளோடு வாழ்ந்த அந்த நாடோடி வாழ்க்கையையும் கதையாகச் சொல்கிறது இந்த நூல். மங்கோலியர்கள் யார், அவர்களின் பண்பாடு என்ன என்பதைப் பற்றிய கேள்விகளுக்கும் இந்த நூல் பதில் அளிக்கிறது. ஒரு கோடைக்காலத்தில் தொடங்கி, குளிர்காலம், பனிக்காலம், வசந்த காலம் என ஆண்டின் அனைத்துப் பருவங்களிலும், குதிரைகளோடும் கற்பனைகளோடும் வளர்ந்த அந்தச் சிறுமிகளின் கதை நமக்கு இதுவரை காணாத வாசிப்பு அனுபவத்தையும் தருகிறது. குழந்தைகள் எல்லா நாடுகளிலும் குழந்தைகள்தானே!
குதிரைகளின் கனைப்பும், கால்நடைகளின் குரல்களும், கோடைப் புல்வெளியின் வாசமும், புதிதாகத் திரட்டிய பாலேட்டின் சுவையும் வாசிக்க வாசிக்க நாம் மங்கோலியாவின் நாடோடி மக்கள் வாழும் கெர் கூடாரங்களுக்குள்ளாகவே சென்றுவிடுகிறோம். அங்கே நடக்கும் நாடாம் திருவிழாவில் கலந்துகொண்டு மங்கோலியர்களாகவே மாறிவிடுகிறோம். கதையின் குட்டித் தலைவிக்கு அவளுக்கு மிகவும் பிடித்த அந்த நட்சத்திரக் குட்டிக் குதிரை மீது கொள்ளைப் பிரியம். அந்த அன்பைப் பகிர்கையில் நம் விழியோரம் நீர் கோர்க்கும்.
ஒரு சிறுமியின் பார்வை வழியே மங்கோலியப் பண்பாட்டையும் வாழ்க்கையையும் அணுக்கமாகப் பார்க்க உதவும் அற்புதமான படைப்புதான் – ‘ஒரு குட்டி நாடோடியின் கதை’.


Reviews
There are no reviews yet.