Description
பாரதிதாசனின் முதல் காப்பியமான ‘சஞ்சீவி பர்வதத்தின் சாரல்’ 1930-இல் வெளியிடப்பட்டது. இதில் குப்பன் மற்றும் வஞ்சி என்ற பாத்திரங்களின் காதல் கதை வழியாக சமூகக் கருத்துகளைப் பாவேந்தர் எடுத்துரைக்கிறார். மூடநம்பிக்கைகளை எதிர்த்தும், காதலின் மேன்மையை வலியுறுத்தியும் எழுதப்பட்ட இந்த நெடுங்கவிதை, தமிழ் இலக்கியத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. மனிதனோ விலங்கோ வானைத் தொடும் அளவு வளர்தல் என்பது அறிவுக்குப் பொருந்தாதது ஆகும். மனிதனாகப் பிறந்தவன் இறப்பது உறுதி. இறந்த பிறகு சொர்க்கம், நரகம் என்பவை கிடையாது போன்ற கருத்துகளைப் பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.
பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துகளைக் காலந்தோறும் சிலர் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்; சில ஏடுகளும் இதே கருத்துகளை வலியுறுத்துகின்றன. எவ்வளவுதான் முயன்றாலும் இவர்களால் மூடத்தனத்தைப் பரப்ப இயலாது என்பதையும், இந்தியா விடுதலை பெற வேண்டும் என்றால் இந்நாட்டில் உள்ள பெண்களுக்கு முதலில் விடுதலை வேண்டும். பெண்களை ஊமை என்று சொன்னால் ஆண்கள் ஆமைகளாய் அந்நியருக்கு அடங்க வேண்டியது தான் என்னும் கருத்துகளையும், பெண் விடுதலைக் கருத்தையும் இக்காப்பியத்தில் பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.

Reviews
There are no reviews yet.