செங்கிஸ் கானின் ஒற்றாடல்: ஒரு ரகசிய வரலாறு

செங்கிஸ் கானின் ஒற்றாடல்: ஒரு ரகசிய வரலாறு

₹450.00

Add to Wishlist
Add to Wishlist

Description

செங்கிஸ் கான் -இந்த மங்கோலிய மாமன்னர் வாழ்ந்த காலத்தில் அப்போது அறியப்பட்ட உலகின் நிலப்பகுதியில் அரை பாகத்துக்கும் மேலாக அவர் வசமானது. நாடோடி வாழ்க்கை வாழும் பழங்குடி மக்கள் கூட்டமாகிய மங்கோலியர்கள் அவரது தலைமையின்கீழ் எவ்வாறு அப்படி ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தைக் கட்டமைக்க முடிந்தது? அந்த ரகசியத்தை மங்கோலியர்களின் மிக முக்கியச் செவ்விலக்கியமான ‘மங்கோலியர்களின் ரகசிய வரலாறு’ என்கிற காவியம் வெளிப்படுத்துகிறது. அக்காவியத்தினூடாகக் கிடைக்கும் தகவல்களில், இந்த மாபெரும் வெற்றிக்கு முக்கிய காரணமாகச் சொல்லப்படுவது செங்கிஸ் கானும் அவரது தோழர்களும் பயன்படுத்திய உளவு நடவடிக்கைகள், ஒற்றாடல் உத்திகளே.
இந்த நூல் செங்கிஸ் கானின் அந்த ஒற்றாடல் உத்திகளை விரிவாக எடுத்துரைக்கிறது. ஸ்தெப்பி புல்வெளியிலிருந்து, ஏவப்பட்ட அம்புகளைப் போலப் பாய்ந்து வந்த குதிரைகளின் மீதிருந்த அவரது வீரர்களின் வெற்றி ரகசியம் மெய்சிலிர்க்க வைப்பது. உலகின் மிக முக்கியமான வரலாற்று சகாப்தம் ஒன்றைத் தமிழ் வாசகர்கள் முன்பு அந்தக் குளிர்தேசத்தின் அசலான சொற்களோடு முன்வைக்கிறது ‘செங்கிஸ் கானின் ஒற்றாடல்: ஒரு ரகசிய வரலாறு’ என்கிற இந்த நூல். ஒரு மங்கோலியப் பதிப்பகத்தோடு இணைந்து இந்த வரலாற்றுக் காவியத்தைத் தமிழுக்குக் கொண்டுவருகிறது ஆழி பதிப்பகம்.

Additional information

Book Author

சோயம்போ ஜாவ்லான்ஸ்த்சாய்கான், தோர்த்துவ்ஷின் ஜாவ்லான்ஸ்த்சாய்கான்

ISBN Number

978-81-686951-6-0

Pages

365

Published in

2026

Publishers

Aazhi Publishers

Size

டெம்மி

Reviews

There are no reviews yet.

Be the first to review “செங்கிஸ் கானின் ஒற்றாடல்: ஒரு ரகசிய வரலாறு”

Your email address will not be published. Required fields are marked *

You may also like...