Description
தங்க விலங்கு சி.பி.சிற்றரசு அவர்கள் எழுதிய வரலாற்றுக் கற்பனை நாடகம்.
இதன் கதைச் சுருக்கம், மயூரக்கோட்டை, மார்த்தாண்டபுரம் ஆகிய இரு மண்டலங்களும் மண்மேடாய் விட்டிருக்கும், பண்டைத்தமிழ் மன்னர்கள் முறைப்படி இருந்திருந்தால் இது ஒரு சாதாரண மானதல்ல. இரு மண்டலங்களின் தளபதிகள் பெண்ணாசையில் புகுந்து மண்ணில் பல தலைகளை உருட்டியிருப்பார்கள். வாள் வீசிய இவர்கள் ஒரு வனிதையின் வேல்வீச்சுக்கு இரையாய்விட்டார்கள். பிறந்த நாட்டின் குற்றக் கூண்டில் ஒன்றும் பேசமுடியாத ஊமைகளாய்விட்டார்கள். ஒரு சிற்றிடையாளின் பற்றுதலால். கண்ணிழந்த மன்னனின் மனைவி அரியாசன மேறுகிறாள். காதல் போட்டியில் ஏற்பட்டிருந்த பெரும் பூகம்பத்தைத் தம் மதியூகத்தால் தடுத்துத் தமிழர் தலையைக் காப்பாற்றித் தரணிக்கு நல்வழி காட்டும் கனகாவை வாழ்த்தி வணங்குகிறார்கள்.
தேர்னாஜி என்ற விலங்கு, தேவிகா என்ற தங்கத்தால் மெருகிடப் பட்டு, சமத்துவங் கண்ட சமுதாயத்துக்குப் பூட்டப்படும் நேரம் விழிப்பெய்தி வீராவேசங்கொண்டு விலங்கைத் தூள் தூளாக்குகிறது. சரியப்போகும் சாம்ராஜ்யங்கள் சமாளித்து நிற்கின்றன. சரித்திரங்கண்டிராத புதுமைதான் எனினும் வெற்றித் தொடக்கம்.

Reviews
There are no reviews yet.