Description
மா. இளஞ்செழியன் அவர்கள் எழுதிய “தமிழன் தொடுத்த போர்” எனும் இந்நூல், 1937 முதல் 1940 வரை தமிழகத்தையே சூறாவளியாக மாற்றி அமைத்த இந்தி எதிர்ப்பு இயக்கத்தின் வரலாற்றுப் பதிவு.
அப்போதைய முதலமைச்சர் ஆச்சாரியார் “கட்டாய இந்தித் திட்டத்தைப் புகுத்தப்போவதாக அறிவித்ததும், 1938-ல் தமிழர் பெரும்படை ஒன்று திருச்சியிலிருந்து புறப்பட்டு சென்னைவரை கால்நடையாக வந்த வரலாறும், இந்தி எதிர்ப்பு போரில் ஈடுபட்டு பெண்கள் சிறைபுகுந்த வரலாறும், நடராசன் – தாளமுத்து என்னும் இருவர் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர்நீத்த வரலாறு, ஆச்சாரியார் ஆட்சி கவிழ்ந்ததும், இதுதான் இறுதி எச்சரிக்கை; இந்தியை ஒழித்துக் கட்டப்போகிறீர்களா இல்லை, நான் போர் தொடுக்கட்டுமா? என்று பெரியார் சென்னையில் போர் முழக்கம் புரிந்ததும், உடனே இந்திக் கட்டாயம் எனும் திட்டம் கை விடப்பட்ட நிகழ்ச்சிகள் உணர்வுபூர்வமாக இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளது.

Reviews
There are no reviews yet.