Description
சாமி சிதம்பரனார் எழுதிய “தமிழர் தலைவர்” எனும் இந்த நூல், தமிழ்மக்கள் அனைவரும், நமது பெரியார் ஈ.வெ.ரா. அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறியவேண்டும்; அவரைப்போன்ற சீர்திருத்தவாதிகளாக வேண்டும்; தமிழ் மக்கள் உலகத்திற்கு வழிகாட்டிகளாக நிற்கக்கூடிய சிறந்த ஒரே சமூகமாக வேண்டும் என்னும் கருத்தை முன்னிறுத்தி எழுதப்பட்டுள்ளது. பெரியாரது பிறப்பு முதல் இன்று வரையிலும் உள்ள வரலாறு குறிப்பிடப்பட்டுள்ளது. பெரியாரின் பெற்றோர் வரலாறு, அவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்ற விதம், இவருடைய இளமைப்பருவக் குறும்புகள், வாலிப விளையாட்டு, குடும்ப வாழ்வு, பெரியாரின் வாழ்க்கைத் துணைவியார் வரலாறு, பெரியாரின் துறவுக் கோலம், பொதுவாழ்வு, பொதுவாழ்வில் வெற்றிபெற்றதற்கான காரணங்கள், அரசியல் வாழ்வு, பிறநாட்டுச் சுற்றுப்பிரயாணங்கள், கொள்கையை நிறைவேற்றுவதில் இவருக்குள்ள உறுதி, அஞ்சாத தன்மை, இடைவிடாத உழைப்பு, பகைவர்களால் இவருக்கு நேருந்துன்பங்கள், இவர் சிறைப்பட்ட காரணங்கள் ஆகிய எல்லாச் செய்திகளும் இவ்வரலாற்றில் எழுதப்பட்டுள்ளன.

Reviews
There are no reviews yet.