Description
பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் 1984, சனவரி 8 அன்று கரூரில் நடைபெற்ற திருச்சி மாவட்ட தி.மு.கழக ஆறாவது மாநாட்டில், “தமிழே மூச்சு!” எனும் தலைப்பில் தமிழர் இன உணர்வு, மொழிப்பற்று மற்றும் சுயமரியாதை உணர்வு ஆகியவற்றின் அவசியத்தினையும், சாதி, மத வேறுபாடுகளை மறந்து “தமிழர்” என்ற ஒரே அடையாளத்தில் ஒன்றுபட வேண்டும் எனவும், தமிழர் ஒற்றுமை மற்றும் இன உணர்வை வளர்த்தாலே சமூக முன்னேற்றம் சாத்தியம் எனவும்,
திராவிடர் கழக மகளிர் அணி சார்பில் 17–9–81 அன்று இரவு சென்னை தியாகராயர் நகர் தந்தை பெரியார் நினைவுத் திடலில் பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில், “இன முழக்கம்!” எனும் தலைப்பில் சுயமரியாதை, சமத்துவம், பகுத்தறிவு ஆகியவை தமிழ்ச் சமூக முன்னேற்றத்திற்கு அவசியம் எனவும், சாதி வேற்றுமை, வர்ணாசிரமம் மற்றும் பிராமணீயம் ஆகிய ஆதிக்கக் கொள்கைகளை எதிர்த்தும், தமிழர் அடையாளம், மொழி, மற்றும் மனித சமத்துவத்தை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்தும் உரையாற்றினார்.
இவ்விரு உரைகளின் தொகுப்பே இந்நூல்.

Reviews
There are no reviews yet.