Description
தமிழினத் தனித்தலைவர் பெரியாரின் வாழ்வும் – சிந்தனையும் கொள்கையும் குறிக்கோளும் தொண்டும் தியாகமும் தமிழ்மக்கள் உள்ளத்தில் எந்நாளும் நிலைத்திட வேண்டும்! தாழ்வுற்ற தமிழினத்தைத் தலை நிமிர்த்திட, வீழ்ச்சியுற்ற தமிழகம் எழுச்சி கண்டிட, வருங்காலத் தலைமுறையினர் பெரியாரின் அறிவுப் பாதையில் விழிவைத்து வழிநடக்க வேண்டும்! இந்நாள் இளைஞர் கூட்டம் அந்தப் பாதையைத் தெளிந்திட பகுத்தறிவுச் சிந்தனையை வளர்த்திட இனமான உணர்வுடன் செயற்பட, உறுதியும் ஊக்கமும் கொண்டிடத் தந்தை பெரியாரின் இயக்கத்தை விளக்கி உரைத்திடும் ஆர்வத்தில், அவ்வப்போது பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் எழுதியும் பேசியும் வெளிவந்த கட்டுரைகள் சிலவற்றின் தொகுப்பே ”தமிழ்வானின் விடிவெள்ளி தந்தை பெரியார்” என்னும் இந்நூல்.

Reviews
There are no reviews yet.