Description
தாசிகள் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர் (1936) என்பது மூவலூர் ராமாமிர்தத்தம்மையார் எழுதிய ஒரு சமூக சீர்திருத்த நாவல். இந்நாவல் “தேவதாஸி முறை ஒழிந்து அச்சமூகம் முன்னேற்றம் அடையவேண்டும், அவர்களால் கூடா ஒழுக்கத்தில் ஈடுபட்டுத் தங்கள் வாழ்க்கையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்ளுவதோடு மனைவி மக்களையும் திண்டாடச் செய்யும் வாலிபர்களின் வாழ்க்கை சிறந்து விளங்கவேண்டும்” என்பதே இந்நாவலின் குறிக்கோளாகும்.
இந்நூல் தேவதாசி முறை ஒழிப்பிற்கான சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்நாவல் தேவதாசி முறை ஒழிப்புக்கு வித்திட்டது, பின்னர் 1947-ல் மெட்ராஸ் தேவதாசி (அர்ப்பணிப்புத் தடுப்பு) சட்டம் இயற்றப்பட இது ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

Reviews
There are no reviews yet.