Description
அமெரிக்காவின் 250ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளிவரும் கட்டுரை தொகுப்பு இது. அமெரிக்காவின் வரலாற்றில் ஒடுக்கப்பட்ட கறுப்பினத்தவர்கள் அரசியல் எழுச்சி கண்ட காலமான ‘ஹார்லெம் மறுமலர்ச்சி’ காலத்தைச் சேர்ந்த சிறந்த கட்டுரைகளின் தொகுப்பு.
‘ஹார்லெம் மறுமலர்ச்சி’ கறுப்பினத்தவரின் அரசியல் விழிப்பை மட்டுமல்ல, அவர்கள் கலை, இலக்கியம், இசை, திரைப்படம் எனப் பல்வேறு துறைகளில் புதிதாக ஒரு புயலாய் நுழைந்த காலம். அதுவரை அவர்களைப் பற்றியிருந்த முன்முடிவுகளை எல்லாம் திருத்தி எழுதிய காலம். எல்லாவற்றிலும் முக்கியமாக அடுத்ததாக நடக்கப்போகும் பொது உரிமைகளுக்கான போராட்டத்தின் அடித்தளம் வலுவாக இடப்பட்ட காலம்.
1910-1930 வரையிலான ‘ஹார்லெம் மறுமலர்ச்சி’ காலகட்டத்தின் முக்கியமான சிந்தனைகளை இத்தொகுப்பு வழங்குகிறது. அமெரிக்க வரலாற்றின் ஒரு முக்கியக் காலகட்டத்தின் ஆவணமாக இது, தமிழில் வெளிவருவது ஒரு வரலாற்று நிகழ்வு என்றே சொல்ல வேண்டும்.


Reviews
There are no reviews yet.