புரட்சியாளர் பெரியார்

புரட்சியாளர் பெரியார்

335.00

Add to Wishlist
Add to Wishlist

Description

தந்தை பெரியார் ஈ.வே. ராமசாமி நம்மோடு வாழ்ந்தவர். நம்மில் ஒருவராக வாழ்ந்தவர்; நம்மிலிருந்து விலகி உயர அமர்ந்து வாழ மறுத்தவர். நம்மில் கோடானு கோடி மாந்தர் புனிதமாகக் கருதும் பலவற்றைச் சாடிச்சாடி வாழ்ந்தவர். அதனால் ஏற்பட்ட எரிச்சல் காரணமாக, ‘பெரியார் நமக்காகவே வாழ்ந்தவர்’; அவர் தன்னுடைய ஆதாயத்திற்காக எதையும் உடைக்காத, பொதுநலப் புரட்சியாளர்’ என்பதை பலர் மறந்துவிட்டிருக்கலாம்; பல்லாயிரவர் பெரியாரின் பெருமையினையும் அருமையினையும் இன்று முழுமையாக உணராமல் இருக்கலாம். இருப்பினும், மக்கள் இன நோய்கள் மாமருந்துகளாக பெரியாரின் கருத்துகளும் அறிவுரைகளும் பயன்படும் என்பது காலம் காட்டக் காத்திருக்கும் உண்மை ஆகும். ‘தந்தை பெரியார், ஈ.வே. ராமசாமியைப் போன்ற ஒரு மாமனிதர், நம்மிடையே வாழ்ந்தார்; தொண்ணூற்று அய்ந்து வயது வரை வாழ்ந்தார்; கடைசி மூச்சுவரை, சூறாவளியெனச் சுற்றி வந்து, புரட்சிச் சிந்தனைகளை பேராறுகளாகப் பாய்ச்சி வந்தார்; வாழ்க்கையின் பல கூறுகளுக்கும் பாடம் சொல்லித் தந்த பேராசானாக விளங்கினார்’ என்பதை இனி வரப்போகும் தலைமுறைகள் நம்ப மறுத்தால், வியப்பில்லை. அத்தனைப் பெரிய சிந்தனையாளராகவும் சாதனையாளராகவும் இரண்டிற்கும் தன்மான இயக்கத் தந்தை, சமத்துவச் சுடரொளி, பெரியார் ஈ.வே. ராமசாமியாரின் நூற்றாண்டு விழாவினை இப்போது கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். இத்தகைய ஒப்பற்ற தலைவரின் வாழ்க்கை வரலாற்றை கல்வியாளர் மற்றும் பகுத்தறிவாளர் நெ. து. சுந்தரவடிவேலு அவர்களால் “புரட்சியாளர் பெரியார்” எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ளது.

Additional information

Book Author

நெ.து.சுந்தரவடிவேலு

Cover

Perfect Binding

ISBN Number

978-81-19304-98-1

Pages

270

Published in

2026

Publishers

Aazhi Publishers

Size

டெம்மி

Reviews

There are no reviews yet.

Be the first to review “புரட்சியாளர் பெரியார்”

Your email address will not be published. Required fields are marked *

You may also like...