Description
ஹெமிங்வேயின் வாழ்வின் ஒவ்வொரு பகுதியும் பல சாகசங்களையும், அனுபவங்களையும் கொண்டது. ஹெமிங்வே தன்னுடைய வாழ்வின் பல பரிணாமங்களை, தன்னுடைய அனுபவங்களை, தான் சந்தித்த மனிதர்களைப் பதிவுசெய்து கொண்டே இருந்தார். அவரது எழுத்துகளில் எது அவரது அனுபவம், எது கற்பனை என்று பிரித்துப் பார்ப்பது மிகவும் கடினம். அவரது விருப்பங்கள் அனைத்தையும் நாம் அவரது கதைகளில் தொடர்ச்சியாகப் பார்க்கிறோம்.
‘சிறுகதை என்னும் கலை’ என்ற கட்டுரையில் ஹெமிங்வே இப்படிச் சொல்கிறார்: “நான் எப்போதும் பனிப்பாறை சித்தாந்தத்தின் படியே எழுத விழைகிறேன். வெளியில் தெரியும் ஒவ்வொரு பகுதிக்கும், நீருக்கு கீழே எட்டில் ஏழு பங்கு பனிப்பாறை மூழ்கி இருக்கிறது. எவையெல்லாம் தேவையில்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அவற்றை எழுதாமல் இருப்பது உங்களது பனிப்பாறையைச் செம்மைப்படுத்துகிறது.”
1920களில் ஹெமிங்வே பாரிஸில் வாழ்ந்த நாட்களில் எழுதிய சிறுகதைகள் சிலவற்றின் மொழிபெயர்ப்பான இத்தொகுப்பில் அதை நீங்கள் காணலாம்.


Reviews
There are no reviews yet.