மாமனிதர் அண்ணா

Description

பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள், அறிஞர் அண்ணாவின் அருந்திறல் வாய்ந்த பெருமைகளையும், அவர் வடித்தெடுத்த கோட்பாடுகளையும், மேற்கொண்ட வாழ்க்கை நெறிகளையும் இளைய தலைமுறையினர்க்கு எடுத்துச்சொல்லி, அந்த மாமனிதரின் குறிக்கோளையும், அவர் உருவாக்கிய இயக்கத்தையும் காப்பாற்ற வேண்டிய கடமை உணர்வை வற்புறுத்தும் ஓர் அரிய ஆவணமாக இத்தொகுப்பை வழங்கியுள்ளார். இந்நூல் தொகுப்பின் வழியாக அறிஞர் அண்ணாவின் பன்முக ஆற்றல்களையும், அவற்றைவிட அவர்தம் விரிந்து பரந்த தன்னலமற்ற பேருள்ளத்தையும் ஈரம் நிறைந்த இதயத்தையும் படம் பிடித்துள்ளார் பேராசிரியர். தாமும், தம் இயக்கத்தவர்களும் பெற்றுள்ள தகுதியும். பெருமையும் அறிஞர் அண்ணாவின் கொடையாகுமெனப் பெருமிதம் கொள்கிறார். நாம் அத்தகைய பெருமிதம் கொண்டவரானால், போட்டியிட்டுக் கொண்டாலும் பொறாமையின்றி இவ்வியக்கத்தை வளர்க்கும் ஆற்றல் மிக்கவராவோம் என எடுத்துக் கூறுகிறார். இங்கு இடம் பெற்றுள்ள கட்டுரைகள், செவ்விகள், சொற்பொழிவுகள் அனைத்தும் அறிஞர் அண்ணாவின் இலட்சிய வரலாற்றையும், அவர் உருவாக்கிய இயக்கத்தின் எழுச்சிமிக்க செயற்பாட்டையும், இந்தத் தமிழினத்தின் இணையற்ற பண்பாட்டு மீட்சி வரலாற்றையும் உள்ளடக்கிய அரிய வரலாற்றுப் பதிவுகள்.

Additional information

Book Author

பேராசிரியர் க.அன்பழகன்

Cover

Perfect Binding

ISBN Number

978-81-19304-36-3

Pages

250

Size

டெம்மி

Publishers

Aazhi Publishers

Published in

2026

Reviews

There are no reviews yet.

Be the first to review “மாமனிதர் அண்ணா”

Your email address will not be published. Required fields are marked *

You may also like...