Description
1953 மும்முனைப் போராட்டம் என்பது குலக் கல்விக்கு எதிரான போராட்டம் என்கிற வகையில் சாதியொழிப்புப் போராட்டமாகவும் நேருவின் ஏதேச்சாதிகாரப் போக்குக்கு எதிராகப் போராட்டம் என்கிற அளவில் தில்லி ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டமாகவும் டால்மியாபுரம் என்று பெயர்வைக்கக்கூடாது என்பதினூடாக ஒரு பனியா ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டமாகவும் உருவெடுக்கிறது. அந்தப் போராட்டம் ஓயப்போவதில்லை, அது ஒரு விடுதலைப் போராட்டமாக நீள்கிறது என்பதைத்தான் “வளரும் கிளர்ச்சி” என்று வர்ணிக்கிறார் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள். “தமிழ்நாடு தமிழருக்கே” என்கிற வைரக்கல் வைத்து இழைத்த தங்கப்பதக்கமே “திராவிட நாடு திராவிடர்க்கே” என்று குறிப்பிடும் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் இந்த குறுநூல் நவீன தமிழ்நாட்டு வரலாற்றை ஆய்வதற்கான ஒரு முக்கிய ஆவணம்.

Reviews
There are no reviews yet.