Description
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் ‘சிந்தனையும், செயலும்’ என்ற இந்தப் படைப்பு வாழ்வியல் கட்டுரைகளின் தொகுப்பு. கல்லும் முள்ளும் நிறைந்த நீண்ட பாதையில் நடந்து, மேடு பள்ளங்களைக் கடந்து, எதிர்பார்ப்புகளையும், ஏமாற்றங்களையும் பார்த்து, வெற்றிகளையும், தோல்விகளையும் ஏற்று, தொண்டர்களின் நம்பகத்தன்மையின் தண்மையையும், நண்பர்கள் சிலர்தம் துரோகத்தின் வெம்மையையும் சந்தித்துப் பெற்ற நீண்ட கால அனுபவமெனும் நீரையும், எருவையும் கொண்ட கழனியில் மலர்ந்த புதுமலர், பொன் மலர். சொல்லுக்குப் பொருள்காண அகராதியின் பக்கங்களைப் புரட்டுவதுபோல, வாழ்க்கையின் சில பிரச்சினைகட்குப் பதில் காண, வாழும் தலைமுறையும், வருகின்ற தலைமுறையும், பக்கங்களைப் புரட்டத்தக்க பனுவல் இத்தொகுப்பு. தமிழன்னையின் அடிகளில் கலைஞர் அவர்கள் படைத்திருக்கும் ஒரு புதிய காணிக்கை. அரசியல், சமுதாய, பொருளாதார சித்தாந்தங்களின் வேறுபாடுகள் அனைத்தும் கடந்து தமிழினம் பொதுவாகப் பயன்படுத்தத் தக்க ஓர் அனுபவத் தொகுப்பு;


Reviews
There are no reviews yet.