Description
நமக்குக் கிடைத்துள்ள பழந்தமிழ் நூல்களுள் தொல்காப்பியமே தமிழர் வாழ்வின் பல்துறை பற்றி அறிவதற்குத் துணை புரிவதாகும். இதனைத் தமிழ்ப் புலவர்கள் மட்டுமே தேர்வு கருதிக் கற்று வருகின்றனர். இது இலக்கண நூல்தான் என்றாலும் ஏனைய மொழிகளில் உள்ள இலக்கண நூல் போன்றதன்று! அண்மை நூற்றாண்டில் தோன்றி வளர்ந்து வரும் மொழி ஆராய்ச்சியும், மேலை நாட்டவரால் விரும்பிப் போற்றப்பட்டு வரும் இலக்கிய ஆராய்ச்சியும், பண்பாட்டுக் கலைகளாம் உயிரியல், உளவியல், வாழ்வியல் முதலியனவும் தன்னகத்தே கொண்டு இயங்குகிறது.
இத்தகைய பழம்பெரும் நூலான தொல்காப்பியத்தினை கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்னும் நோக்கத்துடன், மக்கள் படிக்க விரும்பும் எளிய நடையில், படிப்பவர் ஆர்வத்தை வளர்க்கும் சுவையான கதைக் குறிப்புக்களுடனும், நினைவில் நிறுத்தத் துணையாகும் வரலாற்று விளக்கச் செய்திகளுடனும் இந்தப் பூங்காவை இயற்றியுள்ளார். தொல்காப்பியப் பூங்காவில் இடம்பெறும் சூத்திரங்களின் கருத்தை அவர் தெளியவைக்கும் நுண்மாண் நுழைபுலத்திறன் வியப்பளிப்பது.


Reviews
There are no reviews yet.